விபூதி யோகம்:
சாமானியனின் பார்வையில் ஒருவேளை சாம்பல் தான் விபூதி யோகம் ஆயின், கருமையும் வெண்மையும் கலந்து உள்ளதால் தெய்வீக குறியீடாக நாம் தரித்துக் கொள்கிறோமோ? கருமை வெண்மை (மேன்மை, கீழ்மை) இல்லாதவர் எவர். ஒருவேளை மேன் மக்களில் கூட சிறிதளவு கருமை உள்ளதோ? தங்க அணிகலன் கூட சிறிது செம்பு கலப்படமாக இருந்தாலும் ஜொலிக்கிறதே ! டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் கூட இம்முறை தோபிங் எனக் கூறுவர். விபூதி யோகத்தின் மேன்மையை " விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை கெட்டுப் போனவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை"இதில் முதல் வாக்கியம் மேன்மை சிந்தனையிலும், இரண்டாம் வாக்கியம் கீழ்மை சிந்தனையிலும் அமைந்துள்ளது. விட்டும் கொடுக்க வேண்டாம் கெட்டும் போக வேண்டாம். நம் ஆராய்ச்சி மூன்றாம் கண்ணுடையதாக அமைந்தால் அதில் சில அடிப்படை சம்பவங்களை வைத்து யோசிக்கலாம்.
என் சிறுவயதில் காப்பியில் 2 ஸ்பூன் சீனி போட்டு கொடுப்பார்கள். போதாது மேலும் வேண்டும் என்று அடம் பிடித்தேன். வாலிபம் கடந்தும் தொடர்ந்தது இந்நிலை. சூழ்நிலை காரணமாக சீனி தட்டுப்பாடு. அன்று காலை 2 ஸ்பூன் மட்டுமே போட்டு சாப்பிடும் போது ருசியில் மாற்றம் ஏதும் உணர முடியவில்லை. அதற்கு ஏற்றார் போல் என் அம்மாவும் சித்தியும் அவர்கள் முன்பு தயாரித்த கேசரியில் ஒரு ஆழாக்கு ரவைக்கு இரண்டு ஆழாக்கு என்றும் மற்றொருவர் இரண்டு என்றும் இரண்டரை என்றும் 25 சதவீத வேறுபாட்டை குறித்து தர்க்கம். அவர்கள் தயாரித்த கேசரியை நானும் கூட ருசித்துள்ளேன் எந்த மாற்றமும் இல்லை வேறு ஒரு முறை நானே கேசரி தயாரிக்க முற்படும் போது ஒரு ஆழாக்கு ரவைக்கு ஒன்றே முக்கால் ஆழாக்கு மட்டுமே சீனி சேர்த்தேன் நாக்கின் ருசி ஓரளவுக்கு மேல் உணராது என்பதால் சூப்பர் என்ற பட்டமும் 33 சதவிகித ஜீனியின் சேமிப்பும் போனஸ்.
என் மனைவியிடம் பிள்ளைகளுக்கு காபி சேர்க்கும்போது ஒன்றேமுக்கால் ஸ்பூன் போடு போதும் என்று கூற, அவர்களும் குடித்தார்கள் எந்த குறையும் சொல்லாமல், சில நாட்கள் கழித்து சிறுகச்சிறுக குறைத்து தற்போது ஒரு ஸ்பூணிர்க்கு வந்துவிட்டது. எந்த விட்டுக்கொடுத்தலும் இல்லாமல் ஒன்றரை ஸ்பூன் சர்க்கரை விட்டுக்கொடித்துவிட்டோம்.
எனக்கு சர்க்கரை நோயின் ஆரம்பம். டாக்டர் நான் முற்றிலும் சர்க்கரையை தவிர்க்க உத்தரவு பிறப்பித்தார் உப்பில்லாப் பண்டம் குப்பையிலே அப்போ சக்கரை இல்லா பண்டம் சாக்கடையிலா ? அரை ஸ்பூன் சர்க்கரை போட்ட காப்பி சகிக்கவில்லை மேற் குறிப்பிட்ட கோணத்தில் காப்பியின் அளவைக் குறைத்தேன் அரை ஸ்பூன் அரை டம்ளர். சூப்பர் காப்பி அளவும் குறைந்தது. சர்க்கரை அளவு குறைந்து உடலின் ஆரோக்கியம் நிறைந்தது. இதுபோல் பல விஷயங்கள் பல பெற்றோர்களுக்கு கூறிய சம்பவம் மிக சிறுக சிறுக ஓரளவு குறைக்க முற்பட்டு வெற்றி அடைந்தார்கள். இதை முடிந்த வரைக்கும் பல சம்பவங்களுக்கு உட்படுத்தி பல படிகள் உயரலாம். ஆங்கிலத்தில் இவைகளுக்கு வியா மீடியா என்று கூறுவார்கள். சாம்பல் கோட்டின் மீது நின்று மேன்மைகளை கீழ்மைகளை சிறுக சிறுக யோசித்தால் காலம் கனிந்து மூன்றாம் கண் திறப்பதை உணர்ந்து செயல் பட்டால் தெய்வீகம். சிந்திக்க சிந்திக்க தேவைகள் குறையும். லெஸ் லக்கேஜ் மோர் கம்போர்ட் வாழ்க்கை பயணம் சுகமாக அமையும். "பொண் வைக்கும் இடத்தில் பூ வைத்துப் பார்த்தால், இரண்டும் அழகுதான் ஏற்றுக்கொள். "சிறுகக் கட்டிப் பெருக வாழ்"வையகமும் செழிக்கும் உன்னுடன் சேர்ந்து. அன்றாடம் பல செயல்கள் நமக்கு பல சிந்தனைகளை தூண்டுகிறது. உதாரணமாக நம் சமையலில் முழுகடலை சுண்டல் தயாரிக்க முதல் நாள் இரவு அல்லது நான்கு மணி நேரத்திற்கு முன்பு ஊறவைத்து வேகவைத்து சுண்டலை சமைப்போம். என் சிந்தனையில் ஏன் முதல் நாளைக்கு முன்னாலே ஊறவைத்து சிறிது நேரம் கழித்து துணியில் மூட்டை கட்டி வைத்து மறுநாளைக்கு மறுநாள் சுண்டல் தயாரித்தால் முழு கடலை germinate ஆகி முளைக்கட்டும் ருசி கூடும், எடை கூடும் சத்துக்களும் கூடும் எளிதில் ஜீரணமாகும், வேகும் நேரமும் குறையும், எரிபொருள் சேமிப்பு, என்று பல விதங்களில் நமக்கு போனஸ். என்ன செய்தோம் ஒரு நாளைக்கு முன்னாலேயே ஊறவைத்தோம் அவ்வளவுதானே! நம் அன்றாட சமையலில் சில யுத்திகளை கடைப் பிடித்தாலே பொருள், நேரம் ஆரோக்கியம் போன்ற பல மேன்மைகள் போனஸாக கிடைக்கும் அது திட்டமிடுதல் யுத்திகளின் தாக்கம் நம் அன்றாட அலுவல்களிலும் தானாக புகுந்துவிடும். ஆண்களும் சமையல் கலை அறிந்திருந்தால் தன்னம்பிக்கையும் தன்மானமும் உயரும்போது, ஆண்மைக்கு மேலும் அழகு தற்கால சமையல் உபகரணங்கள் மிக மேன்மையான கண்டுபிடிப்புகளினாள்
சமையல் கலை கற்று சாதிக்கலாம்.
குறிப்பு :தெய்வீகத்தின் வித்தியாசமான அணுகுமுறை உங்களுக்கு உகந்தது. உகந்ததாய் உணர்ந்தாள் இக்கருத்துக்களை உற்றார் உறவினர்களிடம் பகிர்ந்து ஆதரவு அளித்தால் மேலும் பல சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள உற்சாகம் ஏற்படும்.
நன்றாக உள்ளது. நிறைய எழுதுங்கள்
ReplyDeleteநன்றி முடிந்த வரை பகிரவும்
Deleteஅருமையான கருத்துக்கள்... வாழ்த்துக்கள் 🙏💐
ReplyDelete🙏
ReplyDeleteஅருமையான தெய்வீக விளக்கம் அய்யா 😍😍😍😍😍
ReplyDelete