Monday, March 23, 2020

கானல் நீர் போல காரிகை (பெண்)

"காளையின் கண்களுக்கு காரிகைகள் கானல் நீர்!"
"கண்டு கொள்ள வேண்டி இடைவிடா தொடர் ஓட்டம்!"
"ஓட்டத்தின் ஊடே காணும் பல மேன்மைகளை ஒதுக்கிவிடாமல் உட்படுத்தி காட்டு உன் கனவுகளை!" "இயற்கையில் கண்கவர் காரி கைகளும் உண்டு, 
இறைவன் படைப்பின் பண்பியல் இது."
கனவுகளை நினைவாக்கி நிலைத்து காட்டு உன் வாழ்வில்"
 "களைத்துப் போகையில் காரிகையின் இரு விழிகள் உன்னை கவரும், இயற்கையில் ஒன்றான தென்றல் போல".
"காண்பதை எல்லாம் உனக்கு சொந்தமாக நினைக்காதே 
பந்தம் ஆக்கிக்கொள் உன் உயரிய பண்புகளால்".
" உனக்கென்று ஒருவள் இவ்வையகத்தில் காத்திருப்பாள்.
உவகையுடன் ஏற்றுக்கொள் காலம் கைகூடும் போது!"
"இறைவன் படைப்பின் இனியவள் அவள், 
இயல்பாக அவள் நம் கண்களை கவரதான் செய்வாள். 
"வெற்றிக்கு நீ சிந்தும் வேர்வை துளிகளை ஒற்றிவிடும் தென்றல் போல் அவள் அழகு.
"காசுக்கு  வாங்கும் பொருளின் மேல் வஞ்சியர் உருவம் வண்ணம்  தூவிய குரோட்டன்ஸ் இலை போல்."
"கண்டு ரசிக்க மட்டுமே கடவுளின் படைப்பில் பெண்மை." 
கருமையை பூசிடாதே உன் கற்பனை தீயில். 
"காரிகைக்கு மட்டும் தான் கற்பு நெறி என்று எண்ணாதே, 
கட்டிளம் காளையே உனக்கு தான் அது பொருந்தும்."
"கற்புநெறி தவறாதார்  கந்தர்வர்கள் ஆனார்கள்!" 
"கற்புநெறி தவறியவர்கள் காமுகர் ஆனார்கள்!"
                                                  சு. கி. சாமி 

Thursday, March 19, 2020

வாதம்

எவன் ஒருவன் மற்றொருவனை வாதத்தினால் வென்றுவிடுகிறானோ, அவனிடம் அன்பை இழக்கிறான்.
வாதம் என்பது ரயில் தண்டவாளம் போல் இரண்டும் இணையாது, ஆனால் தண்டவாளத்தில் ரயில் போய்க்கொண்டே இருக்கும். அதுபோல் வாதங்கள் நீண்டுகொண்டே போகும். அதில் அவரவர்களுடைய கருத்துக்கள் பயணிக்கும்.
கலிலியோ -உலகம் உருண்டை என்று தன் அறிவினால் உணர்ந்து அறிவித்தார். அவர் கருத்தை அப்போது ஏற்கவில்லை. துரத்தினார்கள்,  அவர் கருத்துக்கு மரணத்தை பரிசாக அளித்தார்கள்.
சானக்கியன்- இளைஞர்கள் மன வளர்ச்சிக்கு அழித்த தத்துவங்களை தான் முதியவர்கள் ஏற்ற்றார்களா?  முடிவு மரணம். 
இப்படி எக்கருத்துக்களையும்  ஏற்கும் மனோபாவம் ஏன் இல்லை,  நம் மக்களுக்கு கருத்துக்களை எற்பதினால்தான் இழப்பு ஏதும் உண்டா? தன்மானத்தை இழப்பதாக கருதி அவர்கள் ஆண்மை பலத்தினை இழக்கிறார்கள். அறிஞர்களின் அறிவை தூண்டுவதற்கு பதில் அவர்களின் மனதை துண்டு துண்டு  துண்டாக்குகிறார்கள். முளையிலேயே எத்தனை ஆண்மை அறிஞர்கள் இவர்களின் செயல்கலினால்  மனம் வருந்தி மன அழுத்தத்தினால் வெதம்பி நோய்க்கு ஆளாக்கப்படுகிறார்கள்?  இளம் வயதிலேயே மாண்டார்கள். விவேகானந்தர் மரணமும் அப்படித்தானே நோய்க்கு மருந்து உண்ணாமல் விரக்தியின் விளிம்பில் இருந்து வீழுந்து விட்டானே. எக்கருத்தையும் ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் நம் மனம் தானே கேட்ட  கருத்தை உள்வாங்கி வைத்துக்கொண்டு பல கோணங்களில் ஆராய்ந்து நமக்கு உகந்தவை என்று உணர்ந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்போகிறோம். எதற்கு கருத்துக்களை முழுமையாக அறிவதற்கு முன்னரே அவர்களிடம் வாதம் புரிய வேண்டும்! அவர்களின் எண்ண ஓட்டத்திற்கு தடைக்கல்லாகி  அவர்கள் மனதை புண்படுத்த  வேண்டும்! சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழியை உற்று நோக்கினால் அதன் தன்மையினை உணரலாம். 
ஏதோ விருந்தில் உணவு உண்டபின் உணவு துறைக்குள் நம் பற்களின் இடையில் சிக்கி அதை நம் பல்லினால் நெருடியும் எடுக்கப்பட்டு துணுக்குகள் வராமல் அடம் பிடிக்கும் போது, வேறு எந்த என்னத்திற்கும் தடைபடாமல் படும் அவஸ்தையை நாம் எப்பொழுதும் அனுபவித்திருப்போம். அப்போது ஏதாவது சிறு துரும்பும் பல்குத்த ஏதுவாக நம் கையில் கிடைக்கும் போது ஏற்படும் உணர்சிகளை எண்ணிப்பாருங்கள் இப்பழமொழியின் தன்மையை உணரலாம் அப்படி ஏதாவது ஒரு சமயத்தில் இக்கருத்துக்கள் நமக்கு உதவலாம் இல்லையா? நம் கடந்த வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் நம் மனதிற்கு ஏற்புடையாமல் வெறுத்து பின் அதன் ஆழத்தை உணர்ந்த அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு. என்ன நாம் செய்ய  போவது,  எல்லாம் நம்மை நாடி வரும் கருத்துக்களை பொறுமையாக சில கணம் கேட்பது மட்டும் தானே என்று நினைத்தால் வாதத்திற்கு இடமேது!
"விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவது கிடையாது கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுப்பது கிடையாது"

யோகா (மூச்சு பயிற்சியுடன் )

இனி மூட்டுவலியா மூச்........
 குப்புறப் படுத்துக்கொண்டு தலையை மார்பில் இருந்து மேலே நோக்கி வளைத்து இரண்டு உள்ளங்கைகளிலும் முகத்தின் தாடை அண்டை கொடுத்து நன்றாக மூச்சை உள்ளிழுத்து மிக நிதானமாக வெளிவிட்டுக் கொண்டே காலை மேல் நோக்கி முடியும் வரை நன்றாக மடக்கி பின்பு கீழ்நோக்கி காலை நீட்டவு ம்  பின்பு வலது காலை முடியும் வரை மேல் நோக்கி மடக்கி நீட்டவும் இப்படி மாறி மாறி பத்து இருபது முறை ஓய்வு நேரங்களிலோ அல்லது காலை படுக்கையில் இருந்து எழும் போதும் பின்பு இரவு படுக்கும் முன்பும் செய்து பழகினால் கால் மூட்டுகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.

Friday, February 7, 2020

சாமி( சாம்பல் கோட்டின் மீது)

விபூதி யோகம்:

சாமானியனின் பார்வையில் ஒருவேளை சாம்பல் தான் விபூதி யோகம் ஆயின்,  கருமையும் வெண்மையும் கலந்து உள்ளதால் தெய்வீக குறியீடாக நாம் தரித்துக் கொள்கிறோமோ?  கருமை வெண்மை (மேன்மை, கீழ்மை) இல்லாதவர் எவர். ஒருவேளை மேன் மக்களில் கூட சிறிதளவு கருமை உள்ளதோ? தங்க அணிகலன் கூட சிறிது செம்பு கலப்படமாக இருந்தாலும் ஜொலிக்கிறதே ! டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் கூட இம்முறை தோபிங் எனக் கூறுவர். விபூதி யோகத்தின் மேன்மையை " விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை கெட்டுப் போனவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை"இதில் முதல் வாக்கியம் மேன்மை சிந்தனையிலும், இரண்டாம் வாக்கியம் கீழ்மை சிந்தனையிலும் அமைந்துள்ளது. விட்டும் கொடுக்க வேண்டாம் கெட்டும் போக வேண்டாம். நம் ஆராய்ச்சி மூன்றாம் கண்ணுடையதாக அமைந்தால் அதில் சில அடிப்படை சம்பவங்களை வைத்து யோசிக்கலாம். 
என் சிறுவயதில் காப்பியில் 2 ஸ்பூன் சீனி போட்டு கொடுப்பார்கள். போதாது மேலும் வேண்டும் என்று அடம் பிடித்தேன். வாலிபம் கடந்தும் தொடர்ந்தது இந்நிலை. சூழ்நிலை காரணமாக சீனி தட்டுப்பாடு. அன்று காலை 2 ஸ்பூன் மட்டுமே போட்டு சாப்பிடும் போது ருசியில் மாற்றம் ஏதும் உணர  முடியவில்லை. அதற்கு ஏற்றார் போல் என் அம்மாவும் சித்தியும் அவர்கள் முன்பு தயாரித்த கேசரியில் ஒரு ஆழாக்கு ரவைக்கு இரண்டு ஆழாக்கு என்றும் மற்றொருவர் இரண்டு என்றும் இரண்டரை என்றும் 25 சதவீத வேறுபாட்டை குறித்து தர்க்கம். அவர்கள் தயாரித்த கேசரியை நானும் கூட ருசித்துள்ளேன் எந்த மாற்றமும் இல்லை வேறு ஒரு முறை நானே கேசரி தயாரிக்க முற்படும் போது ஒரு ஆழாக்கு ரவைக்கு ஒன்றே முக்கால் ஆழாக்கு மட்டுமே சீனி சேர்த்தேன் நாக்கின் ருசி ஓரளவுக்கு மேல் உணராது என்பதால் சூப்பர் என்ற பட்டமும் 33 சதவிகித ஜீனியின் சேமிப்பும் போனஸ்.
என் மனைவியிடம் பிள்ளைகளுக்கு காபி சேர்க்கும்போது ஒன்றேமுக்கால் ஸ்பூன் போடு போதும் என்று கூற, அவர்களும் குடித்தார்கள்  எந்த குறையும் சொல்லாமல், சில நாட்கள் கழித்து சிறுகச்சிறுக குறைத்து தற்போது ஒரு ஸ்பூணிர்க்கு வந்துவிட்டது. எந்த விட்டுக்கொடுத்தலும் இல்லாமல் ஒன்றரை ஸ்பூன் சர்க்கரை விட்டுக்கொடித்துவிட்டோம். 

எனக்கு சர்க்கரை நோயின் ஆரம்பம். டாக்டர் நான் முற்றிலும் சர்க்கரையை தவிர்க்க உத்தரவு பிறப்பித்தார் உப்பில்லாப் பண்டம் குப்பையிலே அப்போ சக்கரை  இல்லா பண்டம் சாக்கடையிலா ?  அரை ஸ்பூன் சர்க்கரை போட்ட காப்பி சகிக்கவில்லை மேற் குறிப்பிட்ட கோணத்தில் காப்பியின் அளவைக் குறைத்தேன் அரை ஸ்பூன் அரை டம்ளர். சூப்பர் காப்பி அளவும் குறைந்தது. சர்க்கரை அளவு குறைந்து உடலின் ஆரோக்கியம் நிறைந்தது. இதுபோல் பல விஷயங்கள் பல பெற்றோர்களுக்கு கூறிய சம்பவம் மிக சிறுக சிறுக ஓரளவு குறைக்க முற்பட்டு வெற்றி அடைந்தார்கள். இதை முடிந்த வரைக்கும் பல சம்பவங்களுக்கு உட்படுத்தி பல படிகள் உயரலாம். ஆங்கிலத்தில்  இவைகளுக்கு வியா மீடியா என்று கூறுவார்கள். சாம்பல் கோட்டின் மீது நின்று மேன்மைகளை கீழ்மைகளை சிறுக சிறுக யோசித்தால் காலம் கனிந்து மூன்றாம் கண் திறப்பதை  உணர்ந்து செயல் பட்டால்  தெய்வீகம். சிந்திக்க சிந்திக்க தேவைகள் குறையும். லெஸ் லக்கேஜ் மோர் கம்போர்ட் வாழ்க்கை பயணம் சுகமாக அமையும். "பொண் வைக்கும் இடத்தில் பூ வைத்துப் பார்த்தால்,  இரண்டும் அழகுதான் ஏற்றுக்கொள். "சிறுகக் கட்டிப் பெருக வாழ்"வையகமும் செழிக்கும் உன்னுடன் சேர்ந்து. அன்றாடம் பல செயல்கள் நமக்கு பல சிந்தனைகளை தூண்டுகிறது. உதாரணமாக நம் சமையலில் முழுகடலை சுண்டல் தயாரிக்க முதல் நாள் இரவு அல்லது நான்கு மணி நேரத்திற்கு முன்பு ஊறவைத்து வேகவைத்து சுண்டலை சமைப்போம். என் சிந்தனையில் ஏன் முதல் நாளைக்கு முன்னாலே ஊறவைத்து சிறிது நேரம் கழித்து துணியில் மூட்டை கட்டி வைத்து மறுநாளைக்கு மறுநாள் சுண்டல் தயாரித்தால்  முழு கடலை germinate ஆகி முளைக்கட்டும் ருசி கூடும், எடை கூடும் சத்துக்களும் கூடும் எளிதில் ஜீரணமாகும்,  வேகும் நேரமும் குறையும், எரிபொருள் சேமிப்பு, என்று பல விதங்களில் நமக்கு போனஸ். என்ன செய்தோம் ஒரு நாளைக்கு முன்னாலேயே ஊறவைத்தோம் அவ்வளவுதானே! நம் அன்றாட சமையலில் சில யுத்திகளை கடைப் பிடித்தாலே பொருள், நேரம் ஆரோக்கியம் போன்ற பல மேன்மைகள் போனஸாக கிடைக்கும் அது திட்டமிடுதல் யுத்திகளின் தாக்கம் நம் அன்றாட அலுவல்களிலும் தானாக புகுந்துவிடும். ஆண்களும் சமையல் கலை அறிந்திருந்தால் தன்னம்பிக்கையும் தன்மானமும் உயரும்போது,  ஆண்மைக்கு மேலும் அழகு தற்கால சமையல் உபகரணங்கள் மிக மேன்மையான கண்டுபிடிப்புகளினாள் 
சமையல் கலை கற்று சாதிக்கலாம்.

குறிப்பு :தெய்வீகத்தின் வித்தியாசமான அணுகுமுறை உங்களுக்கு உகந்தது. உகந்ததாய் உணர்ந்தாள் இக்கருத்துக்களை  உற்றார் உறவினர்களிடம் பகிர்ந்து ஆதரவு அளித்தால் மேலும் பல சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள உற்சாகம் ஏற்படும். 

Friday, January 31, 2020

சாமானியனின் சிந்தனைக்கு

பிள்ளையாரே இந்த பிள்ளை யாரோ
பித்தனாய் பரிதவிக்கும் பிள்ளைக்கு
பக்குவமாய் படைத்திட்டாய் பாங்கான உன் உருவம்
பிராண பொருளை உள்ளிழுக்க உன்
தும்பிக்கை துணை கொண்டு பந்து போல் ஊதினாய் உன் பானை  வைற்றினை பார்த்து பழகினேன் நானும் 
பித்தனாய் இருந்த எனக்கு இத்தனை சுகமா அத்தனைக்கும் உன் உருவம் ஆனந்தம்  ஆனந்தம் !
                                                                         சு.கி சாமி. 


விநாயகரை நினைத்து எந்த ஒரு வேலையையும் துவங்குவது பாரம்பரியம். அப்படி துவங்கினால் விக்கினம் இல்லாமல்  வேலை தடை இன்றி முடியும் என்பது நம்பிக்கை. கோவிலிகோ எந்த ஒரு சடங்கிற்கோ விநாயகரை வழிபட்டு ஆரம்பிக்கிறோம், மேல் கூறிய மிக எளிதான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட பாமாலையை உற்று கவனித்தால்,  விநாயகரின் உருவம் ஒரு செய்தியினை சொல்ல விளைகிறது அது என்ன? பிராண பொருளை, மூச்சுக்காற்றை வயிற்று வரை உள் இழுத்து வெளியேற்றினால் உடல் வெப்பம் சிறிது தனிந்து, மன அமைதியை உணர்ந்து, சிரத்தை உடன் மற்றக் காரியங்களை முடிக்க எதுவாக இருக்கும். 
       
   பிராணப்பொருள் :

 பிரபஞ்சத்தின்   சக்தியை (cosmic energy) பஞ்ச பூதன்களில் ஒன்றான காற்றில்கலந்து, பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகாயம் பிரபஞ்ச சக்தியை, பிராண சக்தியாகவும் அதனின் சுருக்கம் பராஸக்தியாகவும்,  பஞ்ச பூதங்களின் சுருக்கம் கூடி பிரபஞ்சம், என யோசித்தால் சக்தி இல்லையேல் சிவன் இல்லை. என்னும் கூற்று நிரூபிக்கின்றது. (காஸ்மிக் எனர்ஜி) பிரியராக பஞ்சபூதங்கள் செயல்படுகிறது. பிரபஞ்சத்தில் சக்தியும் அதற்கு கூறுகளான இயக்கங்களும் சாமானியன் சிந்திக்க தொடங்கியபின் , விரிவாக ஆராய்ந்தால் மனம் தெளிவுடன் தெய்வீகத்தை ஏற்கும் பக்குவம் அடையும். 
                                 பஞ்சகோஷம்    
உபநிஷத்தில் கூறப்படுவது கோஷம். பிராணமய கோஷம், மனோமய கோஷம், விஞ்ஞானமய கோஷம், ஆனந்தமய கோஷம் 
அன்னமய கோஷம்: நம் பிரபஞ் ஸ்ருஷ்டி நாள் தயாரிக்கப்பட்ட உணவு.
 

"விலங்குகள்  உயிர் வாழ உயிரை தேடுகிறது மனிதா நீ உயிர் வாழ உணவை தேடுகிறாய்".
 

உணவை ருசித்து உணர்வை ரசித்ததினால் உன்னுள் கலந்த இறை அவனை தேடுகிறாய். 
 எப்படி உணவு உடலில் கலந்த பின் பிராண மயமான சீர் மூச்சு இயக்கப்பட்டு மனோமய கோஷத்தில் இணைவதன் மூலம் விஞ்ஞான மயம்கோஷமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, வரும் நிலையில் தெளிவு பெற்று சமாதானமான ஆனந்தமய கோஷத்தில் திளைகிறோம்.
 ஒரு சிறுகதையின் மூலம் விளக்குவோம், ஒரு அரசன் ஜோதிடரிடம் தன் பல குறைகளை கூறுகையில் ஜோதிடர் நீ பல யுத்தங்களில் பல உயிர்களை கொண்டிருக்கிறாய் ,அது உன் வர்ண தர்மம். தப்பில்லை, இருந்தாலும் அறிந்தோ அறியாமலோ ஒன்றிரண்டு நல்ல உயிர்களையும் கொண்டிருக்கக் கூடும், அந்த நல்ல ஆத்மாக்களின் சாபம் மூலமாகவும் உனக்கு பல கஷ்டங்கள் நேரலாம், ஆகையால் ஏழை பிராமணர்களுக்கு திருப்தியாக உணவளித்தால் சில கஷ்டங்கள் விலகலாம் என கூறினார். அரசனும் தன் மந்திரியிடம் ஏழை பிராமணனுக்கு உணவளிக்க,  என்று உத்தரவிட்டார் மந்திரியும் எங்கோ அலைந்து கடைசியில் ஒரே ஒரு ஊஞ்ச விருத்தி பிராமணரை (கழுத்தில் சொம்பை மாட்டிக்கொண்டு இறைவன் பாடல்களைப் பாடிக்கொண்டு அரிசியை தானமாக பெற்று உணவருந்தி வாழ்பவர் ) அணுகி ஏய் !பிராமணரே நீர் நாளை அரசர் அளிக்கும் உணவை சாப்பிடவும் அது அரசர் உத்தரவு என கூறவும் அந்த ஏழை அந்தணர் ஐயோ நான் பிச்சை தானியத்தை சமைத்து விட்டு மிச்சத்தை உண்பவன், எனக்கு பர போஜனம் (மற்றவர் சமைத்தது) சரிவராது. எனக்கூற மந்திரி கோபமடைந்து அரசரிடம் இட்டுச்செல்ல,  அரசர் வார்த்தைகளை தட்ட முடியாமல், அரசு வேறு வழியில்லை என்பதால், ஒரு பிராமணரை     
சமைத்து போட  சொல்லுங்கள் உண்கிறேன் எனக்கூற, அந்தணரேஅவருடைய இல்லத்தில் நாளை உண்ணுங்கள் என உத்தரவிட்டார். மறுநாள் மந்திரி அரண்மனையில் பல உயர்ந்த வகை பலகாரங்கள் செய்வதாக தன் குடும்பத்திற்கு வேண்டியவைகளை வாங்கிக்கொண்டு , உணவு பரிமாற தங்கத் தட்டையும் கேட்டு வாங்கி வந்து இந்த பிச்சைக்கார பிராமணனுக்கு அறுசுவை தேவையா? என்று சிறிது சாதமும் மோர் ஊறுகாய் தங்க தட்டில் பரிமாறி உண்ணச் செய்தார். உஞ்சவிரித்தி பிராமணனும் அரச பயத்தில் உணவை உண்டு தட்டை தன் பையில் வைத்துக் கொண்டு சென்றுவிட்டார். இதை கவனிக்காத மந்திரி தட்டை காணாமல் தேடி ,பின் அரசரிடம் அந்த பிராமணர் தட்டை திருடி விட்டார் என்று கூற அனைவரும் அவரை தேடினார்கள். சில மணி நேரம் கழித்து பிராமணர் தன் பையில் கனமான பொருளான தங்க தட்டை கண்டபின் அடடா,  உன்ட வீட்டிற்கு இரண்டகம் செய்து விட்டோமே,  என்று அரசனிடம் திருப்பி கொடுக்க அரண்மனை நோக்கி விரைந்தார் திரும்பி வரும் வழியில் அவரை அரண்மனை ஊழியர்கள் சிறைபிடித்து சென்று,  அரசனிடம் ஒப்படைத்தனர். பிராமணர், அரசே நான் வேண்டுமென்று திருடவில்லை தாங்கள் அளித்த உணவில் சாத்வீகம் இல்லை ஆகையால் தங்கள் உணவு என்னை தூண்டியது. உணவு ஜீரணமான பின் என் நிலையை உணர்ந்து தங்களிடம் ஒப்படைக்கும் எண்ணத்தில் திரும்பி வரும் வழியில் தான் தங்கள் ஊழியர்கள் என்னை சிறைபிடித்தனர். வேண்டும் என்று சிலருக்கு போஜனம் அளித்துத் சோதனையை முயற்சி பார்க்கலாம். என்று அன்னத்தின் சிறப்பினை எடுத்துரைத்து. பரீட்சித்துப் பார்த்ததில், அரசர் உண்மையை அறிந்து பிராமணரை விடுவித்தார். 

புராணத்தில் பூமியில் இருந்து விலகிய பலவிதமான ஆத்மாக்கள் தேவலோக தீர்ப்பின் பிரகாரம் மரு பிறப்பிற்காக ஆவியாக (நீராவி) மழையில் கலந்து பூமியில் நவதானிய வேரில் தஞ்சமடைந்து,  நமது உடலில் கலந்து, பிறவி எடுக்கிறார்கள். அவ்  உணவினை பிராமணர்கள் பரிஷேசனம் செய்தும்,  மற்றவர்கள் பிரார்த்தித்தும்,  உன்பது நாள் நம் கெட்ட எண்ணங்கள் வீரியம் குறைந்து,  உணர்வு திறன் உயர்ந்து சில மணிநேரங்கள் நம்மை ஆட் கொள்வதை கூட தெய்வீகமாக உணரலாம்.

சாத்வீக உணவு : மேன்மையான உணர்வுடன் சமைத்து உண்பதால் பிரசாதமாக உடலில் கலந்து பிராணமய கோஷத்தை உயர்த்துவதால் அன்னமய கோஷம்  முழுவதும் நம் கையில். பிராணமய கோஷம் அன்னத்தை சார்ந்ததால் ஓரளவு நம் கையில் இவையிரண்டையும் கையாளும் முறையில் தான் மனோமய கோஷத்தில் தன்மையினால் விஞ்ஞானமய கோஷம் ஆராய்ச்சிகள் அமைந்து அதில் தெளிவடைந்து ஆனந்தமய கோஷம் அடைய முடிகிறது. 

எதற்கும் எதிர்வினை உண்டு, என்பது  நியூட்டனின் மூன்றாவது சூத்திரம். வினைக்கு வினைப்பயன் மட்டும் பொறுப்பல்ல, வினையை எப்படி மேற்கொள்ளவேண்டும், என்ற சிந்தனை பயன் மேம்படுகிறது. மதில்மேல் பூனை போல், நான் கடி மதில் சுவரில் ஒருவன் நிற்கின்றான் ஒரு பக்கம் இரண்டு அடி தண்ணீர், மறுபக்கம் இலவம் பஞ்சு எந்த பக்கம் குதித்தாலும் பாதகமில்லை. மூன்று கண்ணாக கோடைகாலமாக இருந்தால் தண்ணீரில் குதிப்பது, குளிர் காலமாக இருந்தால் பஞ்சு நூலில்  குதிப்பது சுகம்தானே. அந்த சுகம் தான் தெய்வீக சிந்தனையின் போனஸ். எந்த ஒரு காரியத்தையும் சாதிப்பதை விடவும் ஆனந்தம் மேம்பட்டது. மேற்கூறிய சம்பவம் மனோமயமும், விஞ்ஞானமயமும் சேர்ந்தது அளித்த போனஸ் தான் ஆனந்தமயம். 
 பஞ்ச கோஷத்தில் அன்னமயகோசம் முழுமையாகவும் பிராணமய கோசத்தில் பாதி யையும் மட்டுமே நம்மால் கையாள கூடியது
 மற்ற மூன்றரை கோஷம் இவைகளால் நிர்மாணிக்கப்பட்டது. ஐந்தில் மூன்றை போனஸ்.

முன் குறிப்பிட்ட மூன்றாம் கண்

God is not a known it is the verb we are always thinking best and worst in the form of two colour black and white the meaning of two colour is nothing bur grey we all taking our decision become sucess then it is divine 

 சாமி என்பது பெயர்ச்சொல் அல்ல வினைச்சொல் எப்பொழுதும் நாம் சிந்திக்கும் மேன்மைகளை கீழ்மைகளைளை இரு வண்ணங்களாக கொண்டால் கருமை வெண்மை இந்த இரு வண்ணங்களில் சந்திப்பே சாம்பல் கோடு சாம்பல் கோட்டின் மீது எடுக்கும் தீர்மானங்கள் வெற்றியில் அமைந்தால் அதுவே தெய்வீகம்.